இசையில்லாப் பாடல் - 1

சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்
செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்
கனவுகள்…. உன் கண்கள் சேருமா?
சாரலில்… உன் இதயம் நனையுமா?

காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்
பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ

(சின்ன சின்னதாய்)

காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்
காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்
உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ

(சின்ன சின்னதாய்)

கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்
காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்
உன் கல்மனசும்… என் நிலமாகும்.... மண்வாசனை… உண்டாகுமோ

(சின்ன சின்னதாய்)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

0 மறுமொழிகள் :