உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி

படம் : துளசி (தெலுங்கு)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா

இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)

உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்

உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்

கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்

உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்




(உன் கண்ணில்பாதி...)

நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?

கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?




(உன் கண்ணில்பாதி...)

விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?




(உன் கண்ணில்பாதி...)

*தூவல் - பேனா


தெலுங்குப் பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

12 மறுமொழிகள் :