குறு நகை கண்டால்...
அன்று எழுதியவர் : Unknown
"ஒரு சிரி கண்டால்" எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :
ஆண் :
குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…
கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும்
தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்…
வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன்
சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே
நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும்
பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும்
உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்
பெண்:
கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே
அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே
இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே
கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை
மலையாளப் பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள் :)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->
yaravathu tamil kondu varalame
வரியும், சந்தமும் நன்றாக பொருந்துகிறது. கவி நயமும் மிக நன்றி !
பாராட்டுக்கள் !
மிக மிக இனிமை!
வாழ்த்துகள்!
surveysan2005 at yahoo.com :)
karaoke use panni eppadi record pannanumnu oru padhivu pottu sollik kodunga.
http://surveysan.blogspot.com/2007/01/blog-post_09.html
ராசா அவரின் இன்னொரு பாட்டிலிருந்து 'எடுத்தது' இது :)
சிறுஒலி கேட்டால் மொழி கேட்டால் எதிரொலி
சதிராடும் பெண்மனத்துள்ளே சிறகாடும் காயங்களா
சிறையான உணர்வினினுள்ளே உறங்காத சோகங்களா
ஏ கண்ணே இது போதுமினி உளமும் உருகியதே
*****
முடியல அருட்பெருங்கோ
எழுதுறத நிறுத்த.
மீதியும் எழுதிட்டேன்னா தனிபதிவா போடவேண்டியதுதான்:-)
திரைபோட்ட தீமோகம் உருகும் நேரம் ஹோய்
தையல் ஏங்கும் நேரம் பட்டெரியும் தீஞ்சந்தனம்
தழுவிடும் வேட்கையில் பெருகுவதேன் கண்ணே
விதியினில் ஆடிடும் துரும்பென என்னுடல் சோர்ந்தோடும் வீணே
மதிவழி நினைவினில் உயிர்க்கிற உன்னுடன் சேர்வேனே நானே
உயிராய் வந்து தீண்டுமோ கனவில் வந்த தேவியும்
http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_3037.html
yaravathu tamil kondu varalame/
நன்றி அனானி ( தயவு செய்து பெயர் குறிப்பிடுங்களேன் :))
வரியும், சந்தமும் நன்றாக பொருந்துகிறது. கவி நயமும் மிக நன்றி !
பாராட்டுக்கள் !/
பாராட்டுக்கு மிகவும் நன்றிங்க கோவி!!!
மிக மிக இனிமை!
வாழ்த்துகள்!/
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிங்க மதுமிதா!
surveysan2005 at yahoo.com :)
/
இங்க இருந்து எடுத்துக்கலாம் சர்வேசன் - . ஆனா இது முழுமையான கரோக்கி அல்ல. பாடகர்களின் குரலை மட்டுப்படுத்த மட்டுமே முடிந்தது. நீக்க முடியவில்லை.
/karaoke use panni eppadi record pannanumnu oru padhivu pottu sollik kodunga./
acoustica mixcraft என்று கூகிளில் தேடி தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதில் கரோக்கியையும் குரலையும் தனிதனி ட்ராக்கில் பதிந்து பிறகு ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் எளிதுதான். கொஞ்சம் பழகினாலே புரிந்து கொள்ளலாம்.
http://surveysan.blogspot.com/2007/01/blog-post_09.html
ராசா அவரின் இன்னொரு பாட்டிலிருந்து 'எடுத்தது' இது :)/
பார்த்தேன் சர்வேசன்.
பல தமிழ் பாடல்களின் கலவைதானோ இது ;)
சிறுஒலி கேட்டால் மொழி கேட்டால் எதிரொலி
சதிராடும் பெண்மனத்துள்ளே சிறகாடும் காயங்களா
சிறையான உணர்வினினுள்ளே உறங்காத சோகங்களா
ஏ கண்ணே இது போதுமினி உளமும் உருகியதே
*****
முடியல அருட்பெருங்கோ
எழுதுறத நிறுத்த.
மீதியும் எழுதிட்டேன்னா தனிபதிவா போடவேண்டியதுதான்:-)/
/போர்க்கால வேகம் உளம்தான் பற்றி வேகும்
திரைபோட்ட தீமோகம் உருகும் நேரம் ஹோய்
தையல் ஏங்கும் நேரம் பட்டெரியும் தீஞ்சந்தனம்
தழுவிடும் வேட்கையில் பெருகுவதேன் கண்ணே
விதியினில் ஆடிடும் துரும்பென என்னுடல் சோர்ந்தோடும் வீணே
மதிவழி நினைவினில் உயிர்க்கிற உன்னுடன் சேர்வேனே நானே
உயிராய் வந்து தீண்டுமோ கனவில் வந்த தேவியும்/
/நன்றி அருட்பெருங்கோ.
http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_3037.html/
மதுமிதா,
உங்களையும் எழுதத் தூண்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே!!! வாழ்த்துகள்!!!
இனிமையான பாடல்.
சொற்கள் அழகாக வந்து விழுந்திருக்கின்றன.
சில இடங்களில் தட்டினாலும் சந்தம் நன்றாக அமைந்திருக்கிறது. உங்கள் பதிவை சுட்டிக் காட்டிய மதுமிதாவுக்கு நன்றி.
ஆர்.எஸ்.மணி
கனடா
/Thanks for introducing ArutperungO's blog. He is a pretty good lyric writer.
ஆர்.எஸ்.மணி /
/அருட்பெருங்கோவின் பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
நன்றாகப் பாடல் எழுதுகிறார்.
ஆர்.எஸ்.மணி/
ஆர்.எஸ்.மணி அவர்கள் நம்ம பதிவில் உங்களுடைய பாடலை சிலாகித்து எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ.
அவர் சிறந்த பாடகர்;
சிறந்த இசையமைப்பாளர்.
Arul,
You may send the music track to my email address: raghava.mani@gmail.com.
I like the music and would like to record the voice over - as a solo male voice.
At present I am busy preparing for my India trip. Would like to do the song on my return.
R.S.Mani
நல்லதொரு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி,அருள்...
வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றிங்க மேடம் !!!
இனிமையான பாடல்.
சொற்கள் அழகாக வந்து விழுந்திருக்கின்றன.
சில இடங்களில் தட்டினாலும் சந்தம் நன்றாக அமைந்திருக்கிறது. உங்கள் பதிவை சுட்டிக் காட்டிய மதுமிதாவுக்கு நன்றி.
ஆர்.எஸ்.மணி
கனடா/
மிக்க நன்றிங்க மணி!!!
எனது பதிவை விளம்பரப்படுத்தியதற்கு நான்தான் மதுமிதாவுக்கு நன்றி சொல்லனும் ;-)
அவர் சிறந்த பாடகர்;
சிறந்த இசையமைப்பாளர்.
/
ஆமாம் மதுமிதா வாசித்தேன். உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும் ;-)
You may send the music track to my email address: raghava.mani@gmail.com.
I like the music and would like to record the voice over - as a solo male voice.
At present I am busy preparing for my India trip. Would like to do the song on my return.
R.S.Mani/
plz take the karaoke from
http://arutperungo.googlepages.com/chirimusic.zip
நன்றி நவீன். :)
கரோக்கி எனது கூகிள் பக்கத்தில் உள்ளது அதன் சுட்டீ மேலே கொடுத்திருக்கேன்
நீங்க தான் இசைப் பிரியனாச்சே சொல்லனுமா?? ;)
/நல்லதொரு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி,அருள்.../
நல்ல அனுபவம்னு சொல்லிட்டீங்க நன்றீ :)
வாழ்த்துக்கள்./
நன்றி காரூரான். வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!
http://neyarviruppam.blogspot.com/2007/10/13.html
yaravathu tamil kondu varalame/
நன்றி அனானி ( தயவு செய்து பெயர் குறிப்பிடுங்களேன் :))
mannikkavum
aluvalagathil
avasaramaga pinuttam kodukkumpothu
peyar adikka nearam illai.
miga arumaiyaga poruntha koodiya varigal.
matrapadi nan palamurai yochipathu undu.
intha paadalai ilayaraja tamilil ean muyarchikkavillai endru.
Oru Chiri Kandaal (Composed by: Ilaiyaraja for the Malayalam movie Ponmudi Puzhayorathu)
ippothu sariyana tamil varigal kidaithullathu.
tamilil kondu varalame..
நல்ல முயற்சி. பாடிப் பார்த்த போது எனக்கு பாடத்தெரியாமல் தட்டும் சில இடங்களில் உங்கள் வார்த்தைகளையே கொஞ்சம் மாற்றிப் போட்டு பாட முயற்ச்சிக்கிறேன். சரி வருமா?
மதுமிதா,
அந்தக் கடைசி பாராவையும் எழுதி பின்னூட்டுங்களேன். நன்றாயிருக்கிறது.
http://neyarviruppam.blogspot.com/2007/10/13.html/
பார்த்தேன் சர்வேசன்... போட்டியெல்லாம் வச்சிட்டீங்க... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு :)
aluvalagathil
avasaramaga pinuttam kodukkumpothu
peyar adikka nearam illai.
/
ஓ... சரிங்க யாழ்!!!
/miga arumaiyaga poruntha koodiya varigal.
matrapadi nan palamurai yochipathu undu.
intha paadalai ilayaraja tamilil ean muyarchikkavillai endru.
Oru Chiri Kandaal (Composed by: Ilaiyaraja for the Malayalam movie Ponmudi Puzhayorathu)
ippothu sariyana tamil varigal kidaithullathu.
tamilil kondu varalame../
நம்ம வலைப்பதிவர்கள் பாடிடுவாங்க கவலைப் படாதீங்க :))
நல்ல முயற்சி. பாடிப் பார்த்த போது எனக்கு பாடத்தெரியாமல் தட்டும் சில இடங்களில் உங்கள் வார்த்தைகளையே கொஞ்சம் மாற்றிப் போட்டு பாட முயற்ச்சிக்கிறேன். சரி வருமா?/
இசையோடு பாடுங்கள் சுல்தான் வார்த்தைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!!!
/மதுமிதா,
அந்தக் கடைசி பாராவையும் எழுதி பின்னூட்டுங்களேன். நன்றாயிருக்கிறது./
அவங்க முழு பாட்டையுமே போட்டுட்டாங்கப்பா... இங்க
மிக மிக இனிமை!
எனக்கும் அந்தப் பாடலைக் கேட்டு
கிறுக்கனும் போல தோணிச்சு
நான் கிறுக்கிய பாடல் மாதிரியான
பாடல் வரிகள் இதோ
"காதல் வந்தால் கவிவந்தால்
மிக அழகு இரவு வந்தால் நிலவு
பூத்தால் பேரழகு நீ வந்தால்
உன் நினைவிருந்தால் கோடியழகு.....
மலரும் பூ முகமே
உன் கண்கள் இமைத்தால்
உன் இதழ்கள் பிரிந்தால்
என் காயமாறுமே கண்ணே
கொஞ்சிடும் உலகமிது கெஞ்சிடும்
இதழ் எனக்கு பக்கம் வந்துவிடு
பாவையே முத்தமிடு பாத்திருக்க
கொள்ளையிடு பள்ளியறை நேரமிது
படித்திட வா.... படிப்பிக்க வா.."
தொடர்ந்தும் முழுமையாக
என் பாடல்வரியை
பாடிப்பார்க்க http://nizalkal.blogspot.com/2007/11/01.html
இந்த பதிவு பல பதிவர்களை பாடல் எழுத தூண்டியிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. வாழ்த்துகள் இன்னும் தொடருங்கள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் கீதா.
என்னுடைய முதல் வலைப்பதிவு http://blog.arutperungo.com/
என்ன சொல்றது,உங்களின் அற்புதமான இந்த வரிகளால் மெய்சிலிர்த்துப் போனேன்(ஆமா இன்னும் என்ன தாமதம்?களத்தில குதிக்க வேண்டியதுதானே)!!!
Bhuvana
ரொம்பவே புகழ்றீங்களே, நாடோடி இலக்கியன்.
எந்த களத்தில் குதிக்க சொல்றீங்கனு புரியலையே :(
Bhuvana/
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி புவனா.
நன்றிங்க girl of destiny!!!
பாடினத அப்படியே ஒரு பதிவா போடுங்க :)