அண்டங்கா லேனா (சொர்க்கம் போவேனா)

பாடல் : அண்டங்கா லேனா (தெலுங்கு) சொர்க்கம் போவேனா (தமிழ்)
படம் : கோதாவரி (தெலுங்கு)
இசை : கே. எம். ராதாகிருஷ்ணன்
குரல் : சுனிதா
தமிழ் வரிகள் : அருட்பெருங்கோ ( இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி :) )

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

கண்கள் மருகிப்பார்த்து… கைகள் இறுகிச்சேர்த்து… உதடு நான்கும்நாணி… முத்தமிட்டதே
வெட்கம் சிவந்துபோக… நாணம் நடுங்கி சாக… காதல்கன்னி உன்னைத்… தொட்டுவிட்டதே
முத்தங்கள் திண்டாடி… முடிகின்ற வேளை… முகம்தொடங்கி நகம்வரையும்… நீதொட்டு மெய்பட்டு என்தேகம் என்னாகுமோ

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

இமைகள் மூடிக்கிடக்க… இதழும் தேடித்திறக்க… இரவுக் களிகள் நடத்த….உயிரும்பூக்குது
காதல் நம்மை நோக்க… கூந்தல் எடையும் சாய்க்க…விரலும் நகமும் தைக்க… காமம்பூக்குது
இரவெல்லாம் போராடி… ஐம்புலனும் வெல்லும்… அதிகாலை புதுவேளை… அப்போது மென்னோடு ஒன்றாக நீராடவா

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

்தெலுங்குப் பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

9 மறுமொழிகள் :


    அது சரிங்க. ஒரு குரூப்பாவே ஆரம்பிச்சுட்டீங்களா.

    / அது சரிங்க. ஒரு குரூப்பாவே ஆரம்பிச்சுட்டீங்களா./

    என்னண்ணே இதுல போய் ஏ குரூப்பு பி குரூப்புனு கேட்டுட்டு ;) எல்லாம் இருக்கிறதுதான்...

    கலக்கறீங்க..அப்படியே கோதாவரி கமலினி போட்டோவையும் போட்டிருந்தா ஒரு இன்ஸிபிரேஷனோட பாடி பார்த்திருப்போம்ல :))))

    கப்பி,

    / கலக்கறீங்க..அப்படியே கோதாவரி கமலினி போட்டோவையும் போட்டிருந்தா ஒரு இன்ஸிபிரேஷனோட பாடி பார்த்திருப்போம்ல :))))/

    ஹி ஹி ஓக்கே ஒக்கே... இருப்பா உனக்காக youtubeல தேடிப்பிடிச்சு வீடியோவே போட்டுட்றேன் ;)

    அது "அந்தங்கா லேனா"

    அதோட அர்த்தம் "அழகா இல்லைன்னாலும்"...


    எப்பிடி??? ;-)

    Arutperungo>>
    Nice musical and lyric blog..Nalla efforts in conjuring telugu lyrics in tamil..Aana 'Andanga lena' means 'Ain't I beautiful?'. Just wondering neenga maari 'swagathukku povena' nnu interpret panniteengnnu..

    Oww. ippa thaan padichen: "இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி :)"

    :-)

    கோபால்,

    அந்தங்கா லேனா தான் சரி. ஆனா அர்த்தம் நீங்க சொன்னது இல்லனு நெனைக்கிறேன். நான் அழகா இல்லையா? னு கேட்கிற மாதிரி வரும்!

    காசி,

    நான் தெலுங்கு பாட்ட மொழிமாற்றம் பண்ணி எழுதுறதா சொல்லவே இல்லையே, பாட்டோட மெட்டுக்கு ஏத்த மாதிரி தமிழ் வரிகள புதுசா எழுதி பாக்கறேன். அவ்வளவுதான். தெலுங்கு பாடல் வரிகள புரிஞ்சிக்கிற அளவுக்கு என்னோட தெலுங்கு அறிவும் வளரல :)