குறு நகை கண்டால்...

"ஒரு சிரி கண்டால்" எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…

கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும்
தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்…
வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன்
சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே
நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும்
பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும்
உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்

பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே
அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே
இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே
கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை

மலையாளப் பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள் :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

அண்டங்கா லேனா (சொர்க்கம் போவேனா)

பாடல் : அண்டங்கா லேனா (தெலுங்கு) சொர்க்கம் போவேனா (தமிழ்)
படம் : கோதாவரி (தெலுங்கு)
இசை : கே. எம். ராதாகிருஷ்ணன்
குரல் : சுனிதா
தமிழ் வரிகள் : அருட்பெருங்கோ ( இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி :) )

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

கண்கள் மருகிப்பார்த்து… கைகள் இறுகிச்சேர்த்து… உதடு நான்கும்நாணி… முத்தமிட்டதே
வெட்கம் சிவந்துபோக… நாணம் நடுங்கி சாக… காதல்கன்னி உன்னைத்… தொட்டுவிட்டதே
முத்தங்கள் திண்டாடி… முடிகின்ற வேளை… முகம்தொடங்கி நகம்வரையும்… நீதொட்டு மெய்பட்டு என்தேகம் என்னாகுமோ

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

இமைகள் மூடிக்கிடக்க… இதழும் தேடித்திறக்க… இரவுக் களிகள் நடத்த….உயிரும்பூக்குது
காதல் நம்மை நோக்க… கூந்தல் எடையும் சாய்க்க…விரலும் நகமும் தைக்க… காமம்பூக்குது
இரவெல்லாம் போராடி… ஐம்புலனும் வெல்லும்… அதிகாலை புதுவேளை… அப்போது மென்னோடு ஒன்றாக நீராடவா

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

்தெலுங்குப் பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->