ஏமாய்ந்தி ஈ வேளா / ஏதேதோ பேசும் என்னை

பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்

மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள 'எங்கேயே பார்த்த நெருக்கம்' பாடலாக...


Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்

சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்

அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்

களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே

பாடல் : ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே
படம் : குஷி
இசை : மணி சர்மா
குரல் : முரளிதர்
வரிகள் : பிங்காலி நாகேந்திரராவ்.

மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் கீழே :

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….

இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்

உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

தமிழ்த்தாய் வாழ்த்து - பொருள் + இசையுடன்

தமிழ்த்தாய் வாழ்த்து :

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இசையுடன் :
neerarum.mp3

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->