நேத்து ஒருத்தர ஒருத்தர...

பாடல் : நேத்து ஒருத்தர ஒருத்தர
படம் : புதுப்பாட்டு
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா, சித்ரா
வரிகள்: ???

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா...கண போட்டா
கேட்டா...பதில் கேட்டா

வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற…

பாட்டுத்தான்...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து...வழி பாத்து
சேத்து...ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே...
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

5 மறுமொழிகள் :


    ஆமா.. நேத்து ஒருத்தரை பார்த்தேண். பழைய நண்பர். ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரியும்?

    / ஆமா.. நேத்து ஒருத்தரை பார்த்தேண். பழைய நண்பர். ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரியும்?/

    அவரேதாங்க சொன்னாரு... :)

    One of the best from Ilaiyaraja..

    Sung by Ilaiyaraja and K.S.Chitra..

    (rest after 6)

    பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் வெளியான புதுப்பாட்டில் ஹீரோ ராமராஜனுக்கு ரெண்டு கதாநாயகிகள்.அப்போது புதுன்னு ப்ரிஃபிக்ஸோட படத்தலைப்பு வருவது ஒரு செண்டிமெண்டா இருந்தது.புதுமனிதன்,புதுநெல்லு புது நாத்து,புதுப்புது அர்த்தங்கள் and so on and s forth..

    எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே,இந்த பூமியே எங்க சாமியம்மா...

    வாங்க சுதர்சன்...
    தகவலா அள்ளீத் தெளிக்கிறீங்க...
    பெண்குரல் சித்ராவினுடையதா? அப்டேட் பண்ணிட்றேன் :) அப்படியே பாடல் வரியும் யாருன்னு சொல்லுங்க ;)