தென்றல் வந்து தீண்டும் போது

பாடல் - தென்றல் வந்து தீண்டும் போது
படம் - அவதாரம்
குரல்கள் - இளையராஜா, ஜானகி
இசை - இளையராஜா
வரிகள் - ???

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசில
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

( தென்றல் வந்து )

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

( தென்றல் வந்து )

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

( தென்றல் வந்து )

( வந்து வந்து போகுதம்மா )

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

4 மறுமொழிகள் :


    கண்பார்வையற்ற கதாநாயகிக்கு வண்ணங்களைப் பற்றி கதாநாயகன் விளக்கும் பாடல் இது.அவதாரம்,நாசரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான முதல் படம்.இதில் எல்லாப் பாடல்களையும் இளையராசா பாடியிருப்பார்.இந்தப் படத்தின் ஒரே டூயட் பாடலான இது ஒரு விஷூவல் ட்ரீட். எங்கள் பள்ளிக்கருகே இருந்த ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்த பார்வைக் குறைபாடு உடைய சகோதரி,வெற்றுவெளியில் சிரிப்பை விதைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருந்தீர்கள்?இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் ஞாபகம் தான் வருகிறது என்பதை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

    "எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
    எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"

    எனது முன் பதின்மங்களில் சில பாடல்கள்

    சுதர்சன்,

    இது மிக மிக அருமையானப் பாடல்...
    கண்களை மூடிக் கேட்கும்போது மனதை எங்கோ இழுத்து செல்லும்...

    உங்களுடைய அந்தப் பதிவை அப்போதே படித்திருக்கிறேன்... பின்னூட்டமும் இட்டிருக்கிறேன் :)

    //அலையும் மனம் போலே//

    அலையும் அலை போலே..

    என்னுடைய தென்றல் வந்து தீண்டும் போது...

    திருத்தி விட்டேன் உதய் :)
    நன்றி!!!