நலம் வாழ என்னாளும்...

பாடல் : நலம் வாழ என்னாளும்
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

(நலம் வாழ)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

3 மறுமொழிகள் :


    மகேஷ் பட்டின் இயக்கத்தில் ஸ்மீதா பாட்டீல் நடித்த "அர்த்" என்னும் இந்திப்படத்தோட தமிழ் வடிவம் தான் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான "மறுபடியும்".இந்தப் படத்தில எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும்.

    //விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
    நகங்களை நாமும் நறுக்குவதுண்டு//
    இந்த வரிகளை வாலி அவர்கள் அவ்வை சண்முகியில் வரும் "ருக்கு ருக்கு ருக்கு" பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

    உங்க பதிவைத் திறந்த உடனே ஒரே நேரத்தில எல்லாப் பாடல்களும் இசைக்க ஆரம்பிச்சுடுது..

    பாடல் துண்டுகள் ஆட்டோ பிளே ஆவதை disable செய்து விட்டு பதிக்கலாமே??

    புது தளத்திற்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்!!!

    வழக்கம்போல தகவலுக்கு நன்றி சொல்லிக்கிறேன் சுதர்சன் :)

    autoplay=false என்று கொடுத்த பின்னரும் இது தொடர்கிறதே... நம்ம தொழில்நுட்ப அறிவுக்கு அவ்வளவுதான் தெரியுது ;)

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்கண்ணா!!!

    கோபிநாத் said...

    அருமையான பாடல்..மிக்க நன்றி அருள் ;)))


    (எங்கே படித்த விஷயம்...எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியவில்லை)

    இந்த பாடல் எழுதிய தினமும் ராஜா அவர்களுடைய பிறந்த நாளும் ஒரே நாள்.

    ஜூலை 07, 2007 மாலை 4:39
    அருட்பெருங்கோ said...

    / அருமையான பாடல்..மிக்க நன்றி அருள் ;)))/

    கோபி, வெட்டி ஒட்டுனதுக்கெல்லாம் நன்றியா? :)


    /(எங்கே படித்த விஷயம்...எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியவில்லை)

    இந்த பாடல் எழுதிய தினமும் ராஜா அவர்களுடைய பிறந்த நாளும் ஒரே நாள்./

    ஓ இது சுவாரசியமா இருக்கே...

    ஜூலை 07, 2007 மாலை 5:03
    பிரேம்குமார் said...

    பதிவு சொடுக்கிய உடன் பாடல் அழகா ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. கேட்கவே சுகமான பாடல்.

    ஜூலை 07, 2007 மாலை 5:09
    சுதர்சன்.கோபால் said...

    அருமையான பாடல்.கேட்கும் போதே கிறங்க அடித்துவிடும்.பாடல் படமாக்கப்பட்ட விதமும் அற்புதமாய் இருக்கும்...

    ஜூலை 10, 2007 மதியம் 12:51
    அருட்பெருங்கோ said...

    / பதிவு சொடுக்கிய உடன் பாடல் அழகா ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. கேட்கவே சுகமான பாடல்./

    ஆமா பிரேம் இது நல்ல வசதிதான்... மொக்கைப் பதிவு போட்றதுக்குப் பதிலா பிடிச்சப் பாட்டுகள ஓட விடலாம் :)

    ஜூலை 10, 2007 மாலை 4:34
    அருட்பெருங்கோ said...

    / அருமையான பாடல்.கேட்கும் போதே கிறங்க அடித்துவிடும்.பாடல் படமாக்கப்பட்ட விதமும் அற்புதமாய் இருக்கும்.../

    வாங்க சுதர்சன்,
    உண்மைதான்.
    பாடல் ஒரு மென்சோக இழையில் கேட்பதற்கு இதம்!